Skip to main content

இரண்டாம் வருட முதலாம் அரையாண்டு (2016/2017) பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான அறிவித்தல்

தங்களுக்கு நிகழ்நிலை (Online) மூலமாக பரீட்சை நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்காக முன் ஆயத்தமாக ஒரு போலிப்பரீட்சை (Mock Exam) 04.08.2021 அன்று மதியம் 01.30 மணி தொடக்கம் 03.30 மணி வரை நடைபெறும்.

உங்களுக்கு வழங்கப்படும் இப் பரீட்சை வினாத்தாளில் பகுதி – I ல் ஏதாவது ஒரு வினாவிற்கும் பகுதி – II ல் ஏதாவது ஒரு வினாவிற்கும் விடையளிக்க வேண்டும். இதற்கு இரண்டு மணித்தியாலங்கள் தரப்படும்.

இத்துடன் மாணவர்களின் தகவலுக்காக இணையவழி மூலம் பரீட்சை நடாத்துவதற்கான ஒரு முன்மொழிவு இணைக்கப்பட்டுள்ளது. இப் பரீட்சை முடிவுற்றதும் https://docs.google.com/forms/d/e/1FAIpQLSc2SuIPKOen9biu_lwtaqxThINyfhTAvMWPrVfb6jZ8JfaT6Q/viewform  link ன் ஊடாக தங்களது பரிந்துரைகளை 04.08.2021 நள்ளிரவு 11.59 ற்கு முன்னர் சமர்ப்பிக்கும்படி வேண்டப்படுகிறீர்கள்.

மேலும், பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல் (User Name & Password) என்பன தங்களால் சமர்ப்பிக்கப்பட்ட மின்னஞ்சல் (Email) முகவரிக்கு அனுப்பிவைக்கப்படும். கிடைக்கப் பெறாத மாணவர்கள் 03.08.2021 காலை 10.00 மணிக்கு முன்னர் பணிப்பாளர்/தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்ப மையம்  ((Director / CICT)) உடன் தொடர்பு கொள்ளவும்.

தொடர்பு கொள்ளவேண்டிய  தொலைபேசி இலக்கம் - 0652240166

 

பிரதி பதிவாளர்,
கலை கலாசார பீடம்,
கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை.
29.07.2021

Mock examination timetable