முதலாம் வருட முதலாம் அரையாண்டு (2018/2019 Batch) பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான அறிவித்தல்
கலை கலாசார பீட முதலாம் வருட முதலாம் அரையாண்டு மாணவர்களுக்கு 17.11.2021 அன்றிலிருந்து பரீட்சை நடாத்ததீர்மானிக்கப்பட்டுள்ளது.
பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் அனைவரும் தாங்கள் தடுப்பூசி பெற்றுக்கொண்ட அட்டையை தம்வசம் வைத்திருத்தல் வேண்டும்.
தடுப்பூசி பெற்றுக்கொண்ட அட்டையை தம்வசம் வைத்திருக்காத மாணவர்கள் எக்காரணம் கொண்டும்
பரீட்சைகளுக்கும் பல்கலைக்கழக வளாகத்தினுல் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
அனைத்து பரீட்சைகளும் சுகாதார நடைமுறைகளுக்கமைய இடம்பெறும். மாணவர்கள் பரீட்சைகளின் போது கட்டாயமாக முகக்கவசம் அணிந்திருத்தல் வேண்டும்.
மாணவர்கள் தங்களுக்கான அனுமதி அட்டையினை (Admission Card) 16.11.2021 அன்று கலை கலாசார பீட பீடாதிபதி அலுவலகத்தில் கீழே குறிப்பிடப்பட்டுள்ள நேரங்களில் பெற்றுக்
கொள்ளவும்.
நேர விபரங்கள் பின்வருமாறு:-
09.00 – 09.30 – EU/IS/2018/AC/01 – EU/IS/2018/AC/100
09.30 – 10.00 – EU/IS/2018/AC/101 – EU/IS/2018/AC/200
10.00 – 10.30 – EU/IS/2018/AC/201 – EU/IS/2018/AC/300
10.30 – 11.00 – EU/IS/2018/AC/301 – EU/IS/2018/AC/400
11.00 – 11.30 – EU/IS/2018/AC/401 – EU/IS/2018/AC/500
11.30 – 12.00 – EU/IS/2018/AC/501 – Other Students
அத்துடன் விடுதி வசதிகளை பெற்றுள்ள மாணவர்கள் 15.11.2021 அன்று விடுதிகளுக்கு சமுகமளிக்கவும்.
விடுதி சம்பந்தமான மேலதிக தகவல்களுக்கு சிரேஸ்ட உதவி பதிவாளர், மாணவர் விவகாரங்கள் திணைக்களத்தினை
தொடர்புகொள்ளவும்.
தொடர்பு கொள்ளவேண்டிய தொலைபேசி இலக்கம் - 0652240731
திருமதி. மு. ச. ஜ. மும்தாஜ் சமீம்
பிரதி பதிவாளர்,
கலை கலாசார பீடம்,
கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை.
10.11.2021