Skip to main content

இரண்டாம் வருட இரண்டாம் அரையாண்டு (2016/2017 Batch)  மற்றும் முதலாம் வருட இரண்டாம் அரையாண்டு (2018/2019 Batch) பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான அறிவித்தல்

கலை கலாசார பீட இரண்டாம் வருட இரண்டாம் அரையாண்டு (2016/2017 batch) மாணவர்களுக்கு 04.01.2022 அன்றிலிருந்தும் மற்றும் முதலாம் வருட இரண்டாம் அரையாண்டு (2018/2019 batch) மாணவர்களுக்கு 03.01.2022 அன்றிலிருந்தும் பரீட்சை நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் அனைவரும் தாங்கள் தடுப்பூசி பெற்றுக்கொண்ட அட்டையை தம்வசம் வைத்திருத்தல் வேண்டும். தடுப்பூசி பெற்றுக்கொண்ட அட்டையை தம்வசம் வைத்திருக்காத மாணவர்கள் எக்காரணம் கொண்டும் பரீட்சைகளுக்கும் பல்கலைக்கழக வளாகத்தினுள்ளும் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

அனைத்து பரீட்சைகளும் சுகாதார நடைமுறைகளுக்கமைய இடம்பெறும். மாணவர்கள் பரீட்சைகளின் போது கட்டாயமாக முகக்கவசம் அணிந்திருத்தல் வேண்டும்.

அத்துடன் விடுதி வசதிகளை பெற்றுள்ள மாணவர்கள் பரீட்சை ஆரம்பிப்பதற்கு இரு தினங்களுக்கு முன்னர் விடுதிகளுக்கு சமுகமளிக்கவும். விடுதி சம்பந்தமான மேலதிக தகவல்களுக்கு சிரேஸ்ட உதவி பதிவாளர், மாணவர் விவகாரங்கள் திணைக்களத்தினை தொடர்புகொள்ளவும்.

தொடர்பு கொள்ளவேண்டிய  தொலைபேசி இலக்கம் - 0652240731

 

திருமதி. மு. ச. ஜ. மும்தாஜ் சமீம்
பிரதி பதிவாளர்,
கலை கலாசார பீடம்,
கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை.
28.12.2021  

பிரதி:     பீடாதிபதி / கலை கலாசார பீடம்
                துறைத்தலைவர்கள் மற்றும் இணைப்பாளர்கள் / கலை கலாசார பீடம்
                பணிப்பாளர் / தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்ப மையம்
                பதிவாளர் / கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை.
                சிரேஸ்ட உதவி பதிவாளர் / மாணவர் விவகாரங்கள் திணைக்களம்