Art Council of Sri Lanka’s “Sarasavi Prathibha” – 2018/2019
Inter universities cultural creation competition was conducted by Art Council of Sri Lanka named “Sarasavi Prathibha” 2018/2019. Mr.S.Chandrakumar Head of Fine Arts, Eastern University appointed as a Chief Coordinator of Programme of Sarasavi Prathiba for Eastern University’s Students, Vantharumoolai. First round of competition was organized by Mr.S.Chandrakumar, Chief Coordinator in Department of Fine Arts, Eastern University. More Students of Eastern University were judged suitable resource Person on 01.03.2019. 2nd competition of the Sarasavi Prathibha was arranged by Art Council of Sri Lanka on 02.08.2019 – 04.08.2019 at the APEGAMA premises in Battaramulla. (110 New Parliament Rd, Sri Jayawardenepura Kotte).
அனைத்து பல்கலைக்கழக மாணவர்களின் கலைத்திறமைக்கு வாய்ப்பளிக்கும் முகமாக இலங்கை கலைப்பேரவையால் ஏற்பாடு செய்யப்படும் 'சரசவி பிரதீபா – 2019' நிகழ்வின் கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கான முதலாவது தகுதிகாண் தேர்வு மார்ச் முதலாம் திகதி நுண்கலைத்துறையின் கலைக் கூடத்தில் நடைபெற்றது. இதில் சிங்கள, தமிழ், இஸ்லாமிய மாணவர்கள் பலர் பங்குபற்றி இசை, நடனம், அறிவிப்பு என பல துறைகளிலும் தமது திறமைகளை வெளிப்படுத்தினர்.
கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கான பிரதம இணைப்பாளராக (Chief Coordinator) நுண்கலைத்துறைத் தலைவர் திரு.சு.சந்திரகுமார் அவர்களும், கிழக்குப் பல்கலைக்கழக மட்டத்தில் பொறுப்பாளராக திருமதி.துஷ;யந்தி சத்தியஜித் அவர்களும் செயற்பட்டனர்.
தகுதிகாண் சுற்றின் பெறுபேறுகளுக்கு அமைய இரண்டாம் சுற்றானது ஆகஸ்ட் மாதம் 2ஆம், 3ஆந் திகதிகளில் கொழும்பு பத்தரமுல்லையில் அமைந்துள்ள 'அபேகம' எனும் இடத்தில் இடம்பெற்றது. இரண்டாம் சுற்றிற்காக கிழக்குப் பல்கலைக்கழகத்தில் இருந்து பதினான்கு மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டிருந்த நிலையில் இறுதிச் சுற்றிற்காக சலீம் பாத்திமா ஷர்பின் (இசை), சிந்துஜா ஸ்ரீராம் (அறிவிப்பாளர்) ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.