Skip to main content

Department of Fine Arts.jpg

Debut of the Rama Nadam Vadamoodi kooththu

Rama Nadam Vadamoodi kooththu (A Traditional Performance of The Eastern Region) was coordinated by Bottom Theatre Activities Organisation and Staged at the night of 21.09.2019 at the premise of Narasinga Vairavar Tampil of Ampilanthurai. Department of Fine Arts supported to this programme. This Kooththu was organised and Coordinated by Mr.S.Chandrakumar, Head/Fine Arts, Eastern University under his Theory of Bottom to Bottom. Villages and Head of the Department Mr.S.Chandrakumar, Lecturer T.Gowrieeswaran and V.Sasikaran participated as actors in this Kooththu. Mr.S.Chandrakumar performed as a character of Ramar (Main Character of this Kooththu) in this Kooththu. Mr.T.Gowrieeswaran Performed as a character of Kommakarnan. This Kooththu annaviyar (Director of Koothu) was Mr.P.Kathikamanathan and Mr.S.Thipan.

 

சிந்தனையில் காலனிய எண்ணம் உட்புகுந்து உடலால் உள்ளூர் வாசியாகவும் சிந்தனையால் காலனிய ஆதிக்கத்திற்குக் கட்டுப்பட்டும் வாழும் நாம், எம்முடைய சொந்த சூழலிலிருந்தும் பண்பாட்டிலிருந்தும் அந்நியப்பட்டுப் போகின்றோம். இப்பின்புலத்தில் ஆரம்பத்திலிருந்து விடுபட்ட கூட்டுவாழ்க்கை முறையையும், சேர்ந்து செயற்படுதலையும் ஆற்றுகை முதன்மையையும்கொண்ட பண்பாட்டு வெளியை உணர்ந்து அதன் அடிப்புறத்தில் செயற்பட்டு, பங்குகொண்டு அதனை அத்தளத்தில் நின்று வலுப்படுத்த வேண்டியது சமகாலத் தேவையாகும். அந்தவகையில் 'அடிப்பறத்தில் இருந்து அடிப்புறத்திற்கு' என்னும் கருத்தியலை மையப்படுத்தி அதன் முன்னெடுப்பாகவும் வலுப்படுத்தலாகவும் அம்பிளாந்துறை கிராமத்தில் அம்மக்களின் பண்பாட்டு வெளியில் பயில்விலுள்ள கூத்தரங்க நடைமுறையை அனைத்துக் கூத்தர்களையும் இணைத்து கிழக்குப் பல்கலைக்கழக நுண்கலைத்துறைத் தலைவரும், அடிப்புற அரங்க செயற்பாட்டு அமைப்பின் தலைவருமான திரு.சு.சந்திரகுமார் அவர்களின் முன்னீடு முகாமைத்துவத்தில் அம்பிளாந்துறை நரசிங்க வைரவர் ஆலய முன்றலில் ஒருவருட களரியடித்துப் பயிற்சி பெற்று 21.09.2019 சனிக்கிழமை மாலை 6.30 மணியளவில் 'இராம நாடகம்' வடமோடிக்கூத்து அரங்கேற்ற விழா நடைபெற்றது. 

இவ் 'இராம நாடகம்' வடமோடிக்கூத்தில் நுண்கலைத்துறை தலைவர் திரு.சுசந்திரகுமார் அவர்கள் பிரதான பாத்திரமான 'இராமர்' பாத்திரமேற்றும் நுண்கலைத்துறை விரிவுரையாளர் து.கௌரீஸ்வரன் கும்பகர்ணனுக்கும், வி.சசிகரன் தசரதனுக்கும் ஆற்றுகை செய்துள்ளமை சிறப்புக்குரிய விடயமாகும். இதன் களரி முகாமைத்துவ தலைவராக திரு.நா.சங்கரப்பிள்ளை அவர்களும் அதன் முழு நடைமுறைப்படுத்தலுக்காக திரு.அழகுதனு, திரு.வி.சசிகரன் ஆகியோரும் அண்ணாவிமார்களாக திரு.ப.கதிர்காமநாதன், திரு.சி.தீபன் ஆகியோரும் செயற்பட்டுள்ளனர். இவ் அரங்கேற்ற விழாவின்போது மாண்பு பெறும் கலைஞர்கள் கௌரவிக்கப்பட்டதோடு, அடிப்புற அரங்கச்செயற்பாட்டு அமைப்பினால் இளங்கலைஞர் ஒருவருக்கு அண்ணாவியார் பட்டம் சூட்டியமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.  

Taxonomy