Skip to main content

Message from the Desk of the Dean

dean-arts.jpg இலங்கை கிழக்குப் பல்கலைக்கழகத்தில் மாணவனாய் இருந்து கற்ற  கலை, கலாசார பீடத்தின் பீடாதிபதியாக உயர்வடைந்திருப்பது பேருவகை தருகிறது. எனக்கு முன்னர் பீடாதிபதியாக கடமையாற்றிய பேராசிரியர் ஜே.கென்னடி அவர்களைத் தொடர்ந்து அடுத்து வரும் மூன்றாண்டுகளுக்கு இப் பதவியை சுமக்கவிருப்பதையிட்டு பெரு மகிழ்ச்சிடைகிறேன்.

பல்லினங்கள் வாழும் இத் தேசத்தில் இனங்கள், மதங்கள், கலாசாரங்களுக்கிடையிலான உண்மையான புரிந்துணர்வும் சகவாழ்வுமே இன்றைய முதன்மைத் தேவையாக அமைந்துள்ளது.

கிழக்குப் பல்கலைக்கழகம் இப்பிராந்தியத்தில் வாழும் மக்களின் மொழி, கலை, கலாசார, வாழ்வியல்,  பண்பாட்டுக் கூறுகளை மதித்து, அனுசரித்து, பேணிப் பாதுகாப்பதன் மூலம் மக்களிடையே புரிந்துணர்வையும் சகவாழ்வையும் உறுதிசெய்ய முடியும் என்பதில் எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளது. அதனூடு தேசத்தின் ஒற்றுமைக்கும் நல்லுறவுக்கும் பாரியதொரு பங்களிப்பை நல்க முடியும்.

இதற்கிணங்க இப்பல்கலைக்கழகத்தின் மாணவர்களும் ஆசிரியர்களும் தாம் பெற்ற கல்வியியை மூலதனமாக கொண்டு  சமூகத்தில் செயலாற்றுவார்களாயின் அதன் மூலம் இப்பிராந்தியமும் மொத்த தேசமும் அமைதியும் புரிந்துணர்வும் நிறைந்ததாக மாற்றமுறும். அத்தகையதொரு சிறந்த மாற்றத்தை ஏற்படுத்துவதில் ஏனையோரை விட கல்விப்புலத்தினருக்கு பாரிய பொறுப்பு உள்ளது.

நமது கலை, கலாசார பீடம் அதற்கான முன்னெடுப்பை மேற்கொண்டு வீறுநடை போட வேண்டும்  என்பதே எனது எண்ணமும் எதிர்பார்ப்புமாகும். இதற்காக பீடாதிபதி என்ற வகையில் எனது முழு முயற்சிகளையும் எனது காலப்பகுதியில் மேற்கொள்வேன் என்பதை உறுதிபடத் தெரிவிக்கிறேன்.

கலாநிதி வ. குணபாலசிங்கம்,
பீடாதிபதி,
கலை, கலாசார பீடம்.

Last Updated
01-Jan-2023